Bigg Boss 5 Tamil Day 57: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை அடுத்து, நவம்பர் 28-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த வார பிக் பாஸ் சிறப்பு எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். 


அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மோதல் வெடிக்கின்றது. 


அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சரியான காரணத்தோடு 3 பேரை நாமினேட் செய்ய வேண்டும். அப்போது, ப்ரியங்காவை நாமினேட் செய்த தாமரை, “தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை,  தாமரை வீட்டில் இருந்தாலும் பிரச்சனை” என ப்ரியங்கா பேசியதாகச் சொல்லி தாமரை நாமினேட் செய்கிறார். அதனை அடுத்து, இந்த வாரம் செய்யப்பவர்களின் பட்டியலை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், அக்‌ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். 






ப்ரொமோ:3






 

ப்ரொமோ:2 






 

ப்ரொமோ:1




























































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண