உலகம் முழுவதும் சிறுமி மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிறுமி மற்றும் சிறார்களுக்கான தவறான காணோட்டத்தில் அணுகுவோர்கள் மீது கடுமையான சட்டம் இயற்றப்பட்டு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்தநிலையில், புனேவை அடுத்த பிம்ப்ரி சின்ச்வாட்டில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 வயது சிறுவன் மீது காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


கடந்த நவம்பர் 15-ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் குழந்தையின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுவன் 4 வயது குழந்தைக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி யாரும் இல்லாத இடத்தில் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். குழந்தையை வெகுநேரமாக காணவில்லை என்று தேடிய 4 வயது சிறுமியின் தாய், ஒரு மூலையில் தன் குழந்தையிடம் அந்த சிறுவன் தவறாக நடந்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். 


விக்கெட் வேட்டையில் ஹர்பஜனை ஓவர்டேக் செய்த அஷ்வின்.. செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த ஹர்பஜன்


பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பித்து ஓடியநிலையில், குழந்தையை மீட்ட தாய், தனது கணவரிடம் நடந்த அனைத்து கொடுமையையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் தெரிவித்துவிட்டு கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுவனின் மீது குழந்தையின் தாய் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சிறுமியும், சிறுவனும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அப்பொழுது 4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 


இதைத்தொடர்ந்து, உதவி காவல் ஆய்வாளர் தௌபிக் சயீத் 12 வயது சிறுவனின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(i)(j) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், சட்டம் 4, 5(m), மற்றும் 6 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Chennai Rains 2021 | அடித்துத்துவைக்கும் கனமழை.. எப்போது குறையும்? அடுத்த 5 நாட்களுக்கான மழை விவரம்..


12 MP Suspended | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளி.. 12 எம்.பிக்கள் இடைநீக்கம்...


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


வைரஸ் எப்படியெல்லாம் செயல்படும் என்பதற்கு ஓமைக்ரான் ஒரு உதாரணம்.. WHO செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கை..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண