கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல்ஹரி இன்டர்நெஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்ததாக போக்சோ வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணியிலும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்  .

 



இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் பாபா மட்டுமே பயன்படுத்தும் பள்ளியின் ரகசிய அறை என்பது தற்போது வரை திறக்கப்படாமலேயே  இருந்தன. சிவசங்கர் பாபா ரகசிய அறையைத் திறக்க வேண்டும் என்றால் சிவசங்கர் பாபாவின் கைரேகை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் சிவசங்கர் பாபா வின் ரகசிய அறையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சிவசங்கர் பாபா  பயன்படுத்தும் ரகசிய பர்சனல் லேப்டாப் ஒன்று இருக்கிறது. அதையும் காவல்துறையினர் கைப்பற்ற முடிவு செய்தனர்.



இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை காவல்துறையினர் ஜெய்சங்கர் பாபாவை நேரில் அழைத்து வந்து கதவைத் திறந்து பரிசோதித்தனர் .

 

இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் என்று சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய அறையிலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் ரகசிய அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஈடுபட்டனர்.



கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுசில் ஹாரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தனி அறை, அலுவலகங்கள் மற்றும் பக்தர்கள் தங்கியுள்ள குடியிருப்பு, பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி விசாரணை. நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில்  50 க்கும் மேற்பட்டோர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடத்தி முக்கிய ஆவணங்களை தற்போது காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபொழுது, ஒரே வழக்கில் தான் தற்பொழுது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மற்ற அனைத்து வழக்குகளிலும் சிவசங்கர் பாபா வெளியில் வராதபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக ஆதாரங்களை தற்போது கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தனர். விரைவில் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண