திருமணத்தை மீறிய பந்தம் பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் அது கொலை செய்யும் முயற்சி வரை செல்லும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.  திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னுடைய நண்பரை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவத்திற்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்  சுப்ரமணியன்(50). இவருடைய நண்பர் ராமச்சந்திரன்(34). ராமச்சந்திரன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் 35 வயது மதிக்க தக்க பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்தச் சூழலில் இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். 


கடந்த சில நாட்களுக்காக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக ராமச்சந்திரன் தன்னுடைய நண்பரான சுப்ரமணியனிடம் கூறியுள்ளார். சுப்ரமணியன் கார் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். அவர் அந்தப் பெண்ணை ராமச்சந்திரனுடன் சேர்த்து வைப்பதாக கூறி அவருடைய தொலைப் பேசி எண்ணை வாங்கியுள்ளார். அதன்பின்னர் அவர் தொடர்ந்து அப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இதை அறிந்து கொண்ட ராமச்சந்திரன் கடும் கோபம் அடைந்துள்ளார். தங்களை சேர்த்து வைப்பதாக கூறிய சுப்ரமணியன் தினமும் அப்பெண்ணுடன் பேசி வருவதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. 


நேற்று முன் தினம் தன்னுடைய நண்பர் சுப்ரமணியனை அழைத்து கொண்டு மது அருந்த சென்றுள்ளார். அப்போது இருவரும் மது அருந்திய பின்பு மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுப்ரமணியனை ராமச்சந்திரன் சரமாரியாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பெயரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர். அவரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு கொலை செய்யும் முயற்சி வரை சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண்: மருத்துவமனையின் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண