இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது கர்ப்பிணிபெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற அப்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 


உத்தரபிரதேச  மாநிலம் மிர்சாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கடந்த 7ஆம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார்.  3 மாத கர்ப்பிணி அவருக்கு உடல் நல குறைவு காரணமாக அங்கு தங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது இரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனையின் கழிவறைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் கழிவறைக்குள் நுழைந்த மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் அப்பெண்ணின் ஆடைகளை கழற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 




மேலும் ஆடையில்லாமல் எப்படி வெளியே செல்வாய் என்று கேட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது அப்பெண்ணின் வாயை மூடியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரிடமிருந்து தன்னை விடுவித்து அப்பெண் உதவிக்கு குரல் கொடுத்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஆட்கள் வருவதை அறிந்த அந்த ஊழியர் தப்பி ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மற்ற பெண்கள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 


 


தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் அப்பெண் கணவரிடம் நடத்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாத கர்ப்பிணிபெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடிக்க காவல்துறை முயற்சி செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிப்புரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.




மேலும் படிக்க:கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அதிரடி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண