அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுக நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிந்து சமவெளி ‘. இந்த படத்தை மைக்கல் ராயப்பன் தயாரித்திருந்தார். சாமி படத்தை இயக்கியிருந்தார். முக்கோண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்றளவும் சமூக வலைத்தளங்களில் சிந்து சமவெளி திரைப்படம் கேலிக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சிந்து சமவெளி படத்தை நான் எடுத்திருக்க கூடாது என வருத்தப்படுகிறார் இயக்குநர் சாமி.
அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியதாவது :
"உயிர் படத்துல தொடங்கி உதவி இயக்குநராக வாழ்க்கை 10 வருடம். பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ. சந்திர சேகர் சார் அப்படினு 10 வருடங்கள் பணியாற்றியிருக்கேன். 2005 இல் உயிர், 2006இல் மிருகம், 2008 இல் சரித்திரம், 2010 இல் சிந்து சமவெளினு ராக்கெட் வேகத்தில் போச்சு. அதற்கு இடையில் மூன்று படம் இடையிலேயே நின்னுடுச்சு. மொத்தம் 7 படம். சிந்து சமவெளி படம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு. நான் சரித்திரம் படத்தை ஒரு மினி பாகுபலியா எடுத்தேன். அந்த படம் சிலம்ப கலையில் டாக்குமெண்டரியாக எடுத்தேன். நல்ல கமர்ஷியல் படம்தான் இரண்டு வருடங்கள் களப்பணி செய்து பண்ணினேன். படம் வெளியகாவில்லை. ராஜ்கிரண் சார் நடிச்சிருந்தாரு. போஸ்டருக்கே நிறைய செலவு பண்ணினோம். எண்டர் தி டிராகன், நாக் அவுட், டிராக்கி போல நம்முடைய பாரம்பரிய கலையை ஏன் முழு நீள படமாக எடுக்கவில்லை என ஏக்கம் இருந்தது. அதற்கு காரணம் என் அப்பா சிலம்பம் கற்றுக்கொண்டவர். அவரது குருநாதருடைய பெயர் அழகர்சாமி. அதை வைத்துதான் படம் எடுக்க திட்டமிட்டேன். அந்த படம் வெளியாகியிருந்தால் எனது கெரியர் மாறியிருக்கும். அதன் பிறகு சர்வைவல் பிரச்சனையாகிடுச்சு. அப்போ ஒரு நண்பர் தயாரிப்பாளரிடம் அழைத்துச்சென்றார்.
நான் அவங்களிடம் 4 கதை சொன்னேன். இப்போ என் வீட்டு அலமாரியில் 20-25 கதைகள் இருக்கு. அப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளரிடம் போகும் நான் தயாரிப்பாளரிடம் என்ன கதை என கேட்பேன், என்ன மாதிரியாக படம் பண்ண விரும்புறீங்கன்னு கேட்பேன். அதற்கு ஏற்ற மாதிரியாக கதை சொல்லுவேன். அப்போ என்னிடம் சர்ச்சையான கதையா சொல்லுங்க அப்படினு கேட்பாங்க. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க சார் அப்படினு சொல்லி யோசிச்சேன். அப்போதான் ரஷ்யன் எழுத்தாளர் எழுதிய ஃபர்ஸ் லவ் படித்தது நினைவுக்கு வந்தது. அதுதான் சிந்துசமவெளி கதை. இதை சொன்னேன் ஓகே சொல்லிட்டாங்க. அந்த படத்தில் நான் செய்த தவறு, கே.பி சார் மாதிரி பாலிஸா சொல்லாம சில இடங்களில் ஓவர் டோஸா போயிடுச்சு. ஆண்கள் செய்தால் இந்த சமுதாயத்தில் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெண் விரும்பி இன்னுடன் உறவு வைத்துக்கொள்கிறாள் என்றால் சமுதாயம் ஒப்புக்கொள்ளவில்லை. சமூக ஆரவலர்கள் இந்த படத்தை பார்க்க கூடாதுனு போராட்டம் பண்ணாங்க. என் குழந்தை பிறந்திருக்கு. அப்போ வீட்டில் கல்லை விட்டு எரிந்தாங்க. என் அம்மா அப்போ கேட்டாங்க ஏம்பா.. கஷ்டப்பட்டு வந்தே... இன்ஜினியரிங் படிச்சே , சினிமா ஆசைனு போன அங்கேயும் நிறைய பேர் வாங்கிட்ட... ஆனால் எல்லாம் கெட்டப்பெயராக இருக்கு. அதன் பிறகு கங்காருனு ஒரு அண்ணன் தங்கை கதையை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் அந்த படமும் அமையவில்லை." என்றார்.