தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் இயக்கியவர் மணிவண்ணன். இயக்குநராகவும் நடிகராகவும் மட்டுமல்லாமல் முற்போக்கு சிந்தனை உடையவராகவும் விளங்கியவர். கோவை வட்டார வழக்குடன் மணிவண்ணன் பேசும் இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துகள் இன்றளவும் பிரபலம்.மணிவண்ணன் குறித்த நினைவுகளையும் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் எத்தகையது என்பது குறித்தும்  இயக்குநர் ராஜகுமாரன் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.




அதில் "மணிவண்ணன் சார் கதையே ரெடியாகாம லொக்கேஷன்ல போயிட்டு, அருமையான சீனை ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துடுவாரு. அந்த ஸ்பாட்லையே எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவாராம். மிக திறமையான ஒரு இயக்குநர். ஒரே சமயத்தில் இரண்டு , மூன்று படங்களை கூட இயக்கும் திறமை படைத்தவர். முதல் முறையாக இவரை கோபிச்செட்டி பாளையாத்தில் , கல்யாண கச்சேரி என்னும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல அவரை பார்த்தேன். தூரத்தில் இருந்து ஒரு வணக்கம் போட்டேன்.அதன் பிறகு நான் மணிவண்ணன் சார் வீட்டை கண்டுபிடித்து சார் எனக்கு உதவி இயக்குநராக ஆக வேண்டும் என சொன்னேன். உடனே அவர்  நாளைக்கு ஐஐடியில் ஷூட்டிங் வந்துடு அப்படினு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிடுச்சு. பரவாயில்லையே  நம்மை இயக்குநர் சேர்த்துக்கிறேன்னு சொல்லிட்டாருனு தோணுச்சு. ஆனால் எனக்கு இந்த ஐ.ஐ.டி மட்டும் எங்கே இருக்குனே தெரியல. அதனால அவரை பார்க்க முடியாமல் போயிடுச்சு. அதன் பிறகு நான் சூர்ய வம்சம் திரைப்படத்தில்தான் அவரை சந்தித்தேன். அப்போ நான் விக்ரமன் சார்க்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். ஆரம்பத்தில் விக்ரமன் சாரும் மணிவண்ணன் சார்க்கிட்டதான் உதவி இயக்குநரா இருந்துருக்காரு. மணிவண்ணன் சார்னு சொன்னாலே எனக்கு சுந்தர்ராஜன் , சத்தியராஜுடன் அமர்ந்து குடிக்கும் சீன்தான் நினைவுக்கு வரும். ஏன்னா மணிவண்ணன் சார்  மிகப்பெரிய குடிக்காரர்.  எல்லா நேரத்திலேயும் அவர் குடிச்சுட்டே இருப்பாராம். ஷூட்டிங்காக இருந்தாலும் சரி  எல்லா இடத்திலேயும் குடிப்பாராம். அது என்ன கலாச்சாரம்னு தெரியல. அந்த பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்ததுனா அந்த மிகப்பெரிய சிந்தனைவாதி இன்னும் நம்மோடு இருந்துருப்பாரு. மிகச்சிறந்த படைப்புகளையும் , நடிப்பையும் கொடுத்துருப்பாரு. பாரதிராஜாவின் கொடி பறக்குது படத்தில் மிகப்பெரிய  வில்லனாக நடிச்சு அசத்தியிருப்பாரு. அதே போல உள்ளத்தை அள்ளித்தா படத்தில் டபுள் ரோல்ல நடிச்சுருப்பாரு. அந்த படத்திற்கு பிறகெல்லாம் அவருடைய கால் ஷீட்டே கிடைக்கல .எனக்கு ஒரு படத்தில் இரண்டு நாள் ரொம்ப கம்மி சம்பளத்திற்கு நடித்து கொடுத்தாரு. யாரிடம் எவ்வளவு பணம் வாங்கனும்னு அவருக்கு தெரியும். தி கிரேட் மணிவண்ணன் சார் “ என பகிர்ந்தார் ராஜகுமாரன் .