சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஒட்டலுக்கு நேற்று மாலை காரில் வந்த வாலிபர், அங்குள்ள பாருக்கு செல்ல முயன்றார். அவர் ஏற்கனவே போதையில் இருந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடும் ரகளையில் ஈடுபட்டார். பின்னர், தனது காரை வேகமாக எடுத்து ஓட்டலின் நுழைவாயில் கேட் மீது வேகமாக மோதினார். இதில் அந்த கேட் உடைந்து, சாலையின் நடுவில் வந்து கார் நின்றது.
இதனால், கிண்டியில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி வந்த வாகனங்கள், அவ்வழியே கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து, காரில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சாலையின் நடுவே இருந்த காரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் முகப்பேரை சேர்ந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் (19) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தொடர்பு கொண்டு கேட்டபோது ஏற்கனவே அதிக போதையில் மாணவராக இருந்த காரணத்தினால் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டல் விடுதியின் பாதுகாவலர்கள் அதிக போதையில் இருப்பவர்களை மீண்டும் விடுதிக்குள் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளனர். ஆனால் ஆகாஷ் முழு போதையில் இருந்துள்ளார் இதனால் போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் பாருக்குள் போயே ஆகவேண்டும் என கூறிக்கொண்டு, என்னை உள்ளே விடுங்கள் என தனது காரின் மூலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விடுதியில் ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர். சமீபகாலமாக விடுமுறை தினங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் போதையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்