ஒரு தொழில்நுட்பம் எப்போது வெற்றியடைகிறது என கண்டுபிடிப்பாளர்களிடம் கேட்டால், அது எப்போது வீட்டின் சமயலறைக்குள் நுழைகிறதோ அப்போதுதான் என்பார்கள். இன்று சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை கடந்துதான் ஏதோ ஒரு வகையில் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படித்தான் தற்போது சமயலில் களமிறங்கியிருக்கிறது ஒரு ரோபோ.


முதலில் நெருப்பு மூட்டி சமைத்தோம் இன்று  சிலிண்டர் , இண்டக்‌ஷன் , மைக்ரோவேவ் என் அடுத்தடுத்தடுத்த தலைமுறைக்கு முன்னேறியாச்சு. இந்த நிலையில் பலருக்கும் பிடித்தமான பர்கரை செய்து தருவதற்காகவே பர்கர் மேக்கிங்  ரோபோ ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு என்னவோ குளிர்சாதன பெட்டி போல இருந்தாலும் இது தானியங்கி ரோபோ.






இந்த ரோபோவானது மனிதர்களின் உதவி இல்லாமல் , வெறும் 6 நிமிடங்களில் பர்கரை தயாரித்து கொடுத்துவிடும்.பர்கர்ருக்கான பிரட்டை சூடு செய்து , அதன் பிறகு வாடிக்கையாளரின் விருப்பமான பர்கருக்கான டாப்பிங்ஸ் மற்றும் பிளேவர்களை சேர்த்து இந்த பர்கரை தயாரிக்கிறது ரோபோ. உணவங்களில் பர்கர் செய்வது போலத்தான் ரோபோவும் ஐந்து படிநிலைகளில் பர்கரை உருவாக்குகிறது. மைக்ரோவேவுக்கு பிறகு உணவுகளை சூடாக கொடுப்பது இந்த பர்கர் ரோபோதான் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.






பர்கர் ஒன்றிற்கு $6.99 வசூலிக்கிறது ரோபோ. அதன்  மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பர்கரை ஆடர் செய்யலாம்.டெபிட் கார்டு, Apple Pay மற்றும் Google Pay போன்றவற்றின் மூலம் பணத்தை செலுத்திக்கொள்ளலாம்.இது 12 சதுர அடி அளவை கொண்டுள்ளது. இதனுள் ஒரு குளிர்சாதன பெட்டி, ஒரு தானியங்கி கிரிடில் மற்றும் சுத்தம் செய்யும் அமைப்பு உள்ளது. குளிர்சாதன பெட்டிக்கும் 50 பர்கர்களை வைத்துக்கொள்ள இந்த ரோபோவால் முடியும். அதே போல இறைச்சி உள்ளிட்ட பிற பொருட்களும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும். இந்த ரோபோவை ஆட்லி, டான் மற்றும் ஆண்டி ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளனர்.