சென்னையின் மக்கள் பெரும்பாலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பேருந்துகளையே நம்பியுள்ளனர். மக்களின் தேவைகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஒவ்வொரு பகுதியிலும் இயக்கப்படுகிறது.  சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் இருந்து அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை நகரத்திற்கும் இடையே தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முருமா. இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை பாரிமுனை செல்வதற்காக பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். பெரும்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு முதல் பேருந்து 5.10 மணிக்கு புறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், மணி 5.30 மணி ஆகியும் பேருந்து இயக்கப்படாமலே இருந்தது.




இதனால், தம்பதிகளான செந்திலும், முருமாவும் பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கணவன்- மனைவி இருவரையும் மீண்டும் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து, பேருந்தின் ஓட்டுநருக்கும், செந்தில் –முருமா தம்பதியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க : திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!


இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் கண்ணன் செந்திலின் மனைவி முருமா பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த முருமா மயக்கம் அடைந்தார். இதைக்கண்டு அங்கிருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர், பேருந்து ஓட்டுநரின் செயலை கண்டித்து பேருந்து நிலையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.




இதையடுத்து, கண்ணகி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்வின்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர். ஓட்டுநர் கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண