பீகார் மாநிலம், மேற்கு சம்பாரனில் உள்ள பெட்டியாவில், ஒரு தாத்தா தனது பேரனின் பிறந்ததற்காக வைக்கப்பட்ட விழாவில் மதுபாட்டிலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அறுபது வயது முதியவரின் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
நர்கதியாகஞ்சில் உள்ள சைத்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் குமார் சிங்கின் வீட்டில், அவரது பேரனின் பிறந்ததால் கடந்த 16 ம் தேதி அவர்களின் சொந்தம் மற்றும் அக்கம்பக்கத்தினரை அழைத்து விருந்து வைத்துள்ளார். அந்த பார்டியில் ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்யப்பட்டது. பேரன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்த தாத்தா உணர்ச்சிவசப்பட்டு காலி மது பாட்டிலை எடுத்து ஆர்கெஸ்ட்ரா பெண்ணுடன் ஆட ஆரம்பித்தார்.
டிஜே இசையில் பெண் நடனக் கலைஞருடன் அவர் ஜாலியாக நடனமாடியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார். வீடியோவில், வீட்டின் குடும்பத்தினர் ரமேஷ் குமார் சிங்கை காலி மது பாட்டிலுடன் நடனமாட விடாமல் தடுத்துள்ளனர்.அதை கேட்காத அந்த 60 வயது முதியவர் தொடர்ந்து நடனமாடியுள்ளார். ஆனால் அதற்குள் அவர் ஆடிய வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இந்த வீடியோ ஜனவரி 16 அன்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்போது ரமேஷ்குமார் சிங் மது அருந்தியாரா இல்லையா என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்த வீடியோ வைரலானதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஷிகர்பூர் போலீசார், ரமேஷ் குமார் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபாட்டில்கள் காலியாக இருந்ததாகவும், ரமேஷ் குமார் சிங் DJ இசைக்கு நடனமாடி மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், பீகாரில் ஏப்ரல் 2016 முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது என்பதும், காலி மதுபாட்டில்கள் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்