ஆபாச படம் பார்த்தவர்களை மிரட்டி 34 லட்சம் ரூபாய் மிரட்டி பணம் பறித்த கும்பலை, சென்னையில் கைது செய்த டெல்லி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது, டவுன்லோட் செய்து பரப்புவது சட்டப்படி குற்றமாகும். எனவே ஆபாச வலைதளங்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒரு கும்பல், ஆபாச படங்களை பார்த்தவர்கள் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. டெல்லி போலீசார் என்று கூறி மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆபாச படம் பார்த்தவர்களின் இணையதள முகவரி மூலம் அவர்களது தனிப்பட்ட விவரங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் சேகரித்த கும்பல், ஆபாச படம் பார்த்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மெஸேஜ் செய்துள்ளனர்.


Yashika Anand | ’யாஷிகாதான் காரை ஓட்டி வந்துள்ளார்’ - காவல்துறை தகவல்.. யாஷிகா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..!


அதில், ‘நாங்கள் டெல்லி போலீசார். நீங்கள்  ஆபாச படம் பார்த்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும். இல்லையென்றால் கைது செய்து  சிறையில் அடைத்து விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். இந்தி மற்றும் இங்கிலீஷில் மெஸேஜை அனுப்பியுள்ளனர். மேலும், தொலைபேசியிலும் மிரட்டியுள்ளனர். இதனை உணை என்று நம்பிய பலர், ஆபாச படம் பார்த்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி ஆன்லைன் மூலம் அந்தக் கும்பலுக்கு பணத்தை செலுத்தியுள்ளனர்.




இந்த நிலையில், இந்த மோசடி செயல்பாடு குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியை காட்டியது. இதுதொடர்பாக டெல்லி போலீசார், திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கூறிவிட்டு, சென்னை வந்தனர். ஆபாச படம் பார்த்தவர்களை மிரட்டிய கும்பல் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவர்களை அலேக்காக தூக்கி விசாரித்தனர். அந்த விசாரணையில், சென்னை மாங்காடு கே.கே.நகரைச் சேர்ந்த ராம்குமார் வயது 32, கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த கேப்ரியல் ஜோசப் வயது 37, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த சந்த வயது 29 ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த கும்பல் டெல்லி போலீசாரின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பலரை ஏமாற்றி ரூ.34 லட்சம் வரை பணம் சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்த டெல்லி போலீசார், அவர்களை மேல் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.


Yashika Anand | யாஷிகா ஆனந்த் கார் விபத்து நடிகை யாஷிகா படுகாயம், தோழி உயிரிழப்பு.