குறும்படம் எடுப்பதற்காக பணம் தேவைப்பட்டதால் தன்னுடைய வீட்டிலேயே கடத்தல் நாடகம் ஆடிய இளைஞரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்


சென்னையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் குறும்படம் எடுக்க ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் குறும்படத்தை இயக்க அவரிடம் பணம் இல்லை. கதையை நம்பி படம் எடுக்காமல் பணத்தை நம்பி குறும்படத்துக்குள் குதித்த அந்த இளைஞருக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருடைய குறும்படத்துக்கு கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேல் பட்ஜெட் வைத்துள்ளனர். அவ்வளவு பணம் கிடைக்காது என தெரிந்ததும் ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் அந்த இளைஞர்.


வடபழனியில் உள்ள வணிகவளாகத்துக்குச் சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. நீண்ட நேரம் வீட்டுக்கு திரும்பாத மகனை பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது இளைஞரின் அப்பாவுக்கு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. உங்கள் மகனை நாங்கள் கடத்திவிட்டோம். ரூ.30 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம். 




மேலும் படிக்க: மதிப்பெண்களை காட்டி பள்ளி மாணவிகளை ப்ளாக்மெயில் செய்த சைக்கோ ஆசிரியர்.. குவிந்த புகார்கள்!


போலீசாரிடம் செல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். தெலங்கானாவில்  உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணத்தை கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இளைஞரின் தந்தை இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அவரது போன்காலை ஆய்வு செய்த போலீசார் தெலங்கானா அருகே இருந்த டவர் பாய்ண்டில் இருந்து அந்த போன்கால் பேசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் தெலங்கானா விரைந்தனர். அந்த குறிப்பிட்ட டவர் பாய்ண்ட் படி உள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 


காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞர் தன்னுடைய இரு நண்பர்களுடன் விடுதி அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணை நடத்தியதில் குறும்படத்துக்கு பணம் தேவைப்பட்டதால்தான் கடத்தல் நாடகமாடியதாக தெரிவித்துள்ளனர். இளைஞருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்


இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய கடத்தப்பட்ட சிறுமி: ஸ்நாப்சாட் உதவியுடன் மீட்ட பிரெஞ்சு போலீஸ்!


மேலும் படிக்க: உடலுறவை தவிர்த்து வந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கணவன் - காவல்நிலையத்தில் புகாரளித்த மனைவி...


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண