சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் உள்பட குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர்.


இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன் திருமங்கலம் காவல்நிலையத்தில் நேற்று நேரில் வந்து சரணடைந்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், முருகன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் மிகுந்த நபரான முருகன் தான் கொள்ளையடிப்பதற்காக திரைப்படங்களையே உதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முருகன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு வங்கியில் எந்த இடத்தில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரியும்.


மேலும் படிக்க : Arumbakkam Bank Robbery: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு; மொத்தம் 31.7 கிலோ தங்கம் மீட்பு!


வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன். பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கியில் கொள்ளையடிப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டேன். கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் தேவைப்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் உதவினர். அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம்” இவ்வாறு அவர் கூறினார்.




கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் திரைப்படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே வலிமை படத்தில் வரும் வசனத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பாக முருகன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்களது கொள்ளை சம்பவங்களுக்கு உதாரணமாக திரைப்படங்களை உதாரணமாக எடுத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. 


சமீபகாலமாக கூட, நெட்பிளிக்சில் வெளியான மணி ஹைய்ஸ்ட் வெப்சீரிசை பார்த்துவிட்டு இந்தியாவிலே பல இடங்களில் கொள்ளை முயற்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!


மேலும் படிக்க : 5 வயது பெண் குழந்தை கைப்பையில் துப்பாக்கி குண்டு... பரபரப்பான சென்னை விமான நிலையம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண