ஒவ்வொரு ஆண்டும் ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த முதல் 10 நடிகைகளின் பட்டியலை வெளியிடும் . அந்த வகையில் கோலிவுட் ரசிகர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரபலமான நடிகை பட்டியலில் முதலிடத்தில் நடிகை நயன்தாரா இடம்பிடித்துள்ளார். சமந்தா இரண்டாவது இடத்தையும் த்ரிஷா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முழு பட்டியல் இதோ :

கவும் பிரபலமான 10 தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இங்கே

1.நயன்தாரா

2. சமந்தா ரூத் பிரபு

3. த்ரிஷா கிருஷ்ணன்

4. கீர்த்தி சுரேஷ்

5. பிரியங்கா மோகன்

6. தமன்னா பாட்டியா

7. ஜோதிகா

8. பூஜா ஹெக்டே

9. அனுஷ்கா ஷெட்டி

10. சாய் பல்லவி

சாய் பல்லவி :

சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் , அவர் 10 வது இடத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் விரத பர்வம் மற்றும் கார்கி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. வெளியான படங்கள் இரண்டுமே வணிக ரீதியாக எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் கூட சாய் பல்லவியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் பிரபல நடிகை பட்டியலில் 10 வது இடத்திற்கு சென்றதுதானவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண