குழந்தையை விற்ற வழக்கு: ஆட்டோ டிரைவால் சிக்கிய தாய்... பெண் புரோக்கர்களை தூக்கிய போலீஸ்!

ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், ஆட்டோவை வழிமறித்து யாரும் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று கூறியதை அடுத்து, யாஸ்மின் மீது போலீசார் சந்தேகமடைந்தனர்.

Continues below advertisement

2.50 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த, தாயே குழந்தையை விற்பனை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

சென்னை புழல் காவாங்கரை கே.எஸ்.நகர்  6ஆவது தெருவை சேர்ந்த யாஸ்மின் (28), கடந்த 25ஆம் தேதி தனது இரண்டாவது குழந்தையை பெண் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்து அன்று இரவே வேப்பேரி காவல் நிலையத்தில், குழந்தை விற்பனை ரூ.2.50 லட்சத்துடன் ஆட்டோவில் சென்றபோது புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் பைக்கில் வந்த இரண்டு பேர் ஆட்டோவை வழிமறித்து கொள்ளையடித்து சென்றதாக புகார் கூறினார்.

 

இந்தப் புகாரின் அடிப்படையில், குழந்தையை விற்பனை செய்ய புரோக்கராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஆரோக்கியமேரி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஆரோக்கிய மேரி வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார், ஸ்ரீதேவி தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறினர். இதனைத்தொடர்ந்து, சிவக்குமார் மாமனார் வீட்டில் இருந்து மீட்டனர்.  மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை... அவமானத்தால் கொன்ற 15 வயது சிறுமி!

இதனிடையே, ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், ஆட்டோவை வழிமறித்து யாரும் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று கூறியதை அடுத்து, யாஸ்மின் மீது சந்தேகமடைந்த போலீசார், கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வழக்கில் திடீர் திருப்பமாக வேப்பேரி காவல்நிலையத்திற்கு ஜெகன், சந்தியா என்ற தம்பதி வந்து பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்றும், தங்களிடம்தான் இருக்கிறது என்றும், அந்தப் பணத்தை யாஸ்மிந்தான் கொடுத்து வைத்ததாகவும் கூறினார்கள். இந்த தம்பதி தகவலை கூறிய பிறகு யாஸ்மின் பணம் கொள்ளையடித்தது குறித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் மீட்கப்பட்ட குழந்தையை அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையின் தாய் யாஸ்மின், புரோக்கர்களாக செயல்பட்ட  ஜெயகீதா, தனம், குழந்தையை விற்பனைக்கு வாங்கிய சிவக்குமாரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். Dowry Death | ''அவன் சரியில்லை'' : மீண்டும் கடிதம்.. கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை! விடாது தொடரும் துயரம்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola