சென்னையில் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக பிச்சைக்காரர் ஒருவரை சக பிச்சைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்குவது பெரம்பூர். பெரம்பூரில் அமைந்துள்ளது ஓட்டேரி. இந்த பகுதியில் உள்ள பி.எஸ். மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு வயது 66. இவர் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள முஸ்லீம் சுடுகாடு நுழைவுவாயில் பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். இவர் நீண்ட ஆண்டுகளாக பிச்சை எடுத்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
புளியந்தோப்பு வ.உ.சி. 8வது நகரைச் சேர்ந்தவர் மணி. இவருக்கும் வயது 66. இவரும் சண்முகம் என்பவருடன் இணைந்து பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுப்பதில் சண்முகத்திற்கும், மணிக்கும் இடையே சமீபகாலமாகவே போட்டி இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், வழக்கம்போல மணியும், சண்முகமும் பிச்சை எடுத்து வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொணடனர். அப்போது, ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணியின் மீது திடீரென குத்தினார். சண்முகம் மணியின் கன்னம் மற்றும் இடது கையில் கத்தியால் குத்தினார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ஏராளமான ரத்தமும் வழிந்தோடியது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். தொழில் போட்டி காரணமாக பிச்சைக்காரர்கள் இருவரும் தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டதும், ஒருவர் மீது மற்றொருவர் கத்திக்குத்து நடத்தியதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Watch Video : தவறாக நடந்துகொண்ட காவலர்...! செருப்பால் அடித்த பெண் பயணி..! வைரல் வீடியோ உள்ளே..!
மேலும் படிக்க : Tiruppur: இரவு வேலைக்கு போவதாக கூறி கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற மனைவி: ஆத்திரத்தில் கணவர் வெறிச்செயல்!மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்