தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு பிறகு தந்தை ஒருவர் வேறு பெண்ணுடன் பழகியதை கண்ட மகன் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(48). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவருடைய மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் தன்னுடைய இரண்டு மகன்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் செல்வத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த பழக்கம் தொடர்பாக செல்வத்தின் மகன் கவியரசுவிற்கு எப்படியோ தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல முறை செல்வம் மற்றும் கவியரசு இடையே பிரச்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இவர் பல முறை தன்னுடைய தந்தை கண்டித்துள்ளார். எனினும் அவருடைய தந்தை தொடர்ந்து அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.




மேலும் படிக்க:கலவரமாக மாறிய சிறுவர்களின் ப்ரீ பையர் கேம்... 5 பேருக்கு வெட்டு.. தேவாலயம் மீது கற்கள் வீச்சு!




இந்நிலையில் நேற்று வெளியே சென்றுவிட்டு கவியரசு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் தன்னுடைய வீட்டில் தந்தை செல்வத்தை அந்தப் பெண்ணுடன் மீண்டும் கவியரசு பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த கவியரசு கத்தியை எடுத்து தன்னுடைய தந்தையை நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த செல்வத்தை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அவருடைய மகன் கவியரசு சரண் அடைந்துள்ளார். அவரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த தந்தையை மகன் ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயத்துடன் தந்தை செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது கொலை செய்ய முயற்சி என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண