சென்னையில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். அம்பத்தூரிலும் ஏராளமான வட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் மற்றும் புனிதா ஆகிய தம்பதியினர் அம்பத்தூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு “லாக்டவுன்” என்று பெயர் வைத்தனர்.
அம்பத்தூரில் நடைபெற்று வந்த கட்டுமான பணி ஒன்றில் ரோகித்-புனிதா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் பணியாற்றி வந்தனர். இதற்காக, அவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அம்பத்தூரில் அவர்கள் வசித்து வந்த வீட்டின் அருகில் 18 வயதே நிரம்பிய லாக்டவுன் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை வழக்கமாக விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருக்கிறது என்று குழந்தையின் பெற்றோர்களும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையை காணவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதியினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தங்கியிருந்த பிற தொழிலாளர்கள், சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு குழந்தை ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குழந்தையை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூரில் காணாமல் போன “லாக்டவுன்” என்ற குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. ஒடிசா மாநில தம்பதியின் காணாமல் போன குழந்தையை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். அதேசமயம் குழந்தை காணாமல் போனது எப்படி என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : ஆரோவில் அருகே ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட சேற்றில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்