விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே ஆழ்துளை கிணறுக்காக அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய சேர் கலந்த நீரில் விழுந்த 2 சிறுவர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இனித்தா. இவர்களுக்கு லெவின் என்கிற நான்கு வயது மகனும், லோகித் என்கிற மூன்று வயது மகனும் உள்ளனர். மாலை நேரத்தில் விளையாடி சென்ற இரண்டு சிறுவர்களும் காணவில்லை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிஜ்க்கை க்ளிக் செய்யவும்:- Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்
இவர்கள் இருவரையும் தேடிய போது வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு அதிலிருந்து வெளியான சேர் கலந்த நீர் பள்ளத்தில் தேங்கி நின்றிருந்தது அந்த பள்ளத்தில் உள்ள சேற்றில் விழுந்து இரண்டு சிறுவர்களும் மூச்சற்ற நிலையில் இருந்தனர். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் இரண்டு சிறுவர்களும் எற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிஜ்க்கை க்ளிக் செய்யவும்:- காவல்துறை தகுதி தேர்வுக்கு எடையை கூட்டி காட்ட 4 பேண்ட்களை போட்டு வந்த பெண் தகுதி நீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் ஆழ்துளை கிணறுக்காக அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய சேர் கலந்த நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பம் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்