பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை விளம்பரப்படுத்த முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இதன்காரணமாக விதவிதமான போட்டோஷூட்களை அவர் நடத்தி வருகிறார். நேற்று காலை நடிகை, தனது அழகான தோற்றத்தில் வெள்ளை புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார்.  அது அனைத்தும் பிரமிக்க வைத்தது.


தற்போது, இன்று வேறொரு வெள்ளைப் புடவை அணிந்து, வெள்ளைப் பூனையுடன் இருக்கும் புகைப்படங்களை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பூனையை கட்டிப்பிடித்து அவர் முத்தம் கொடுக்கிறார். 






 


 






தொடர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட அலியா,  ‘கங்குபாய் கத்தியவாடி’ பிப்ரவரி 25ஆம் தேதி திரையில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ஆலியாவின் தோற்றத்தைப் பார்த்து பிரமித்த ரசிகர்கள், காதல் மற்றும் ஆர்ட்டின் ஈமோஜிகள் மூலம் தங்களின் அன்பை பொழிந்தனர்.


கொரோனா தொற்றுநோய் காரணமாக பல தாமதங்களுக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய படம் இறுதியாக பிப்ரவரி 25 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. இது 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும், தெலுங்கிலும் பிப்ரவரி 25 அன்று வெளியிடப்படுகிறது.


ஹுசைன் ஜைதியின் நாவலான மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பையின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், விஜய் ராஸ், சீமா பஹ்வா, சாந்தனு மகேஸ்வரி, ஜிம் சர்ப், வருண் கபூர் மற்றும் இந்திரா திவாரி ஆகியோரும் நடிக்கின்றனர்.


Also Read | Gautham Karthik Manjima Wedding: மஞ்சிமா மோகனை திருமணம் செய்யும் கெளதம் கார்த்திக்.. முழு விபரம் உள்ளே..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண