மதுராந்தகம் அருகே வீட்டில் யாரும் இல்லாததை கண்டு சென்னையைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திருட முயன்ற இளைஞர்களை தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.




திருட முயன்ற திருடர்கள்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சலவைத் தொழிலாளியான, பார்த்தசாரதி குடும்பத்துடன் விவசாய பணிக்காக வயல்வெளிக்கு சென்றுள்ளனர். விவசாயப் பணி முடிந்து பார்த்தசாரதி வீட்டுக்கு வந்த பொழுது அவரது சென்னையை சேர்ந்த 3 வாலிபர்கள் திருட முயன்றுள்ளார்.  


தப்பி ஓடிய திருடர்கள் கூட்டம்


பார்த்தசாரதி வருவதை கண்டு வீட்டில் வெளியே நின்று இருந்த திருடர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பி ஓடியுள்ளார். வீட்டிற்கு உள்ளே சென்று திருட முயன்ற இரண்டு வாலிபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக தப்பிச்சென்றே ஏரியில் இரண்டு திருட்டு வாலிபர்கள் பதுங்கி இருந்தனர்.




உதவிய ட்ரோன் 


இதை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரிக்கரை முழுவதும், சுற்றி ட்ரோன் கேமரா மூலம் ஏரியில் பதுங்கி இருந்த வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.




இதையடுத்து மதுராந்தகம் போலீசார் 2 இளைஞர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாததை கண்டு சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.