தொழில் நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை
சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை, உலகளாவிய தரத்திலான நோயாளி பராமரிப்பு மற்றும் முன்னணி அறுவை சிகிச்சை சேவைகளை நகரத்திற்கு கொண்டு வருவதில் தனது முயற்சியை வலுப்படுத்துவதற்காக , தனது வேளச்சேரி கிளையில் 100% தொழில்நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை மையமாக மாற்றுவதில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தது. நகரத்தில் முதன் முறையாக அறிமுகமாகும் எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோட் (SSi Mantra 3), தொலைதூர அறுவை சிகிச்சை (Telesurgery) மற்றும் டெலிபிராக்டரிங் திறன்களை கொண்ட மிகுந்த முன்னணி ரோபோட்டிக் அமைப்பாகும். இது நோயாளிகளுக்கு நேரத்திற்கேற்ப , திறமையான மற்றும் மலிவான அறுவை சிகிச்சை வழங்குவது ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் இது சிறுநீரகம், மகப்பேறு மருத்துவம், இரைப்பை குடல் மருத்துவம், பொதுவான அறுவை சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு, இதன் மூலம் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சரியான நேரத்தில் துல்லியமான அறுவை சிகிச்சையை அளிக்க முடியும்.
இதற்கான துவக்க விழாவில் பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் மந்த்ரா சர்ஜிகல் ரோபோட்டிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தெற்காசியா வணிக மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் ரோஹித் குப்தா உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
3D, 4K மானிட்டருடன் அறுவை சிகிச்சை கன்சோல் ;
எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோ சிஸ்டம், அறுவை சிகிச்சையின் துல்லியம், செயல் திறன் மற்றும் நோயாளிகள் விரைவாக குணம் அடையும் வகையில் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் நான்கு மாடுலர் ரோபோ கைகள், 3D 4k மானிட்டருடன் அறுவை சிகிச்சை கன்சோல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இதில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் துல்லியமான மற்றும் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்ய அதிநவீன இமேஜிங் மற்றும் ஒளிரும் கருவிகள் என ஏராளமான வசதிகள் உள்ளன. சிஸ்டத்தின் வடிவமைப்பு, ஹெட் டிராக்கிங் மானிட்டரின் மூலம் நோயாளியின் பாதுகாப்பிற்கு உறுதி அளிப்பதோடு , இது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சற்று நகர்ந்திருப்பதை உணர்ந்தாலும் கட்டுப்பாடுகளை இடைநிறுத்துவதோடு , அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தவறுகளையும் குறைக்கிறது. மேலும் அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்த வேண்டிய உபகரணங்களைப் பற்றிய பயிற்சியையும் விர்சுவல் ரியாலிட்டி (Virtual reality) முறையில் அளிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில் ;
எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோடிக் சிஸ்டத்தின் அறிமுகத்துடன் எங்களது அறுவைசிகிச்சை அரங்கை 100 சதவீத தொழில்நுட்பத்திற்கு மாற்றி உள்ளோம். எதிர்கால சுகாதாரப் பாதுகாப்பில் நாங்கள் மேற்கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கையானது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம் ஆகும். தொலைதூர அறுவை சிகிச்சை (Telesurgery) போன்ற மேம்பட்ட அம்சங்கள் மூலம் , பிரசாந்த் மருத்துவமனையானது அறுவை சிகிச்சை முறைகளில் தற்போது நிலவி வரும் இடைவெளியை வெகுவாக குறைக்கும்.
இன்றைய புதிய துவக்கமானது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான எங்களின் தற்போதைய உறுதிப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு நல்ல பலன்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுவை சிகிச்சை முறைகளை வழங்குதல் ஆகிய இரண்டிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
மந்த்ரா சர்ஜிகல் ரோபோட்டிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தெற்காசியா வணிக மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் திரு. ரோஹித் குப்தா பேசுகையில் ;
எங்களின் எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோட்டிக் முறையை சென்னை நகர மக்களுக்கு வழங்க பிரசாந்த் மருத்துவமனைகளுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளிகளின் வாழ்க்கையில் உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்த புதுமையான மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தை தங்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வருவதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். அந்த வகையில் அவர்கள் தங்கள் அறுவை சிகிச்சை அரங்கை 100 சதவீத தொழில்நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர்.
மேலும் உலகின் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் எங்களின் எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோட்டிக் அமைப்பு கொண்டிருப்பது என்பது உண்மையிலேயே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் சென்னையில் பிரசாந்த் மருத்துவமனையில் இதை அறிமுகம் செய்வது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
அதிநவீன 4 - வது தலைமுறை வெலிஸ் ரோபோவைப் பயன்படுத்தி 400 - க்கும் மேற்பட்ட வெற்றிகரமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து, பிரசாந்த் மருத்துவமனைகள் மேம்பட்ட எலும்பியல் பராமரிப்பில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் துல்லியமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , நீண்ட கால பயன்களை உறுதி செய்கிறது. பல்வேறு புதிய அறிமுகங்கள் நோயாளிகளின் வலியை குறைத்து அவர்கள் விரைவாக குணம் அடைவதை உறுதி செய்கின்றன. எனவே நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதே தங்களின் முக்கிய குறிக்கோள் என்று இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.