கடந்த சில மாதங்களாகவே சென்னை அடுத்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட படுவதாக தாம்பரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தாம்பரம் ரயில்வே போலீசாரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், கடந்த 5 ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டரில், டிக்கெட் வாங்கும் போது செல்போன் திருடப்பட்டதாக தாம்பரம் ரயில்வே நிலையத்தில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தார்.
செல்வக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். காவல்துறையினர் கைப்பற்றி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாக டிக்கெட் வாங்குவது போல, இரண்டு பேரிடம் இருந்து செல்போனை லாவகமாக திருடிக்கொண்டு தப்பிக்கும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது .
இதனை கண்ட தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் சிசிபி கட்சியில் இருந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர் . இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து அந்த திருடனை கைது செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதே டிக்கெட் கவுண்டர் பகுதியில், சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் நின்றுகொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்தனர் .
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த, உருவமும் அந்த நபரின் ஒன்றாகவே இருக்கவே, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெயர் சாப்ளா மேன்டல் என்பது அவர் ஜார்க்கண் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விலையுயர்ந்த செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருடன் அவனிடம் இருந்து விலை உயர்ந்த 26 சொல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 26 செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பர் மூலம, புகார் கொடுத்தவர்களின் பட்டியல் வைத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் வேறு சில ரயில் நிலையங்களிலும் சாப்ளா மேன்டல் செல்போன்களைத் திருடியதாக தெரிய வந்திருக்கிறது. கூட்டமாக இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு உங்களை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக காவல்துறையினர் அமர்த்த வேண்டும். மேலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X