டெல்லியில்  சபியா என்ற பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகரான டெல்லி   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த பெண் அதிகாரியை பல  நபர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரக் கொலை சம்பந்தமான குற்றவாளிகளை டெல்லியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல்துறை இந்த கொடூர கொலை செய்த உண்மை குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி, அந்த கொடூர சம்பவத்தை  கண்டிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு பணிமனை அருகில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், இறுதியாக கீழ்க்கண்டவாறு  கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், டெல்லி மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றிய பெண்ணை கொடூரமாக கொலை செய்த உண்மை குற்றவாளியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வியைக் கானல் நீராக்கும் நீட் தேர்வை இரத்து செய்வதற்காக தமிழக அரசு முனைப்புக் காட்டுவது பாராட்டிற்குரியது. இருப்பினும் ஒன்றிய அரசு வரும் 12ஆம் தேதி நீட் தேர்வை நடத்தவுள்ளது. கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வின் போது தேர்வுக்கு முன் திருடர்களை நடத்துவது போல் மாணவர்களை சோதனை என்ற பெயரில்   மனதளவில் சோர்வடையச் செய்ததை நாம் அறிவோம். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி பலர் தேர்வில் கவன செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு மோசமான சூழல் இவ்வாண்டு நடைபெறாமல் இருக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக மாநில செயலாளர்கள் சாதிக் பாட்சா, சலி முல்லாஹ்கான், மாநில அமைப்புச் செயலாளர் உசேன் கனி, IPP மாநில செயலாளர் மெளலவி அப்துல் காதர் மன்பஈ உள்பட  ஏராளமான பெண்கள் உள்ளிட்ட சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.