திருமணங்கள் என்றால் அனைத்து நாடுகளில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு தான். அதிலும் குறிப்பாக  இந்தியாவில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கொண்டாட்டமாக இருக்கும். மூன்று நாட்களுக்கு மேலாக பல திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். அத்துடன் இந்த திருமண நாட்கள் எப்போது மணமகன் மற்றும் மணமகளுக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்திருக்கும்.  அந்தவகையில் ஒரு திருமண சடங்கு சம்பிரதாயத்தின் போது மணமகன் ஒருவர் செய்த செயல் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. 


 


அதன்படி திருமணம் ஒன்றில் கடைசியாக மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு சம்பிரதாயம் நடைபெறும். அந்த சடங்கின் போது மணமகள் மணமகனுக்கு மாலையை ஈட்டார். ஆனால் அதற்கு பின்பு மணமகன் மணமகளுக்கு மாலை ஈடாமால் நின்றுள்ளார். அவர் மாலையை கழுத்தில் ஈட வேண்டும் என்றால் மணமகள் அவருக்கு ஒரு முத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். 


 






அதை முதலில் சற்று வெட்கத்துடன் மறுத்த பெண் இறுதியில் உறவினர்கள் அனைவரின் ஆரவாரத்துடன் மணமகனுக்கு  முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 68 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண