புதுச்சேரி வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (46). இவர் கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் புதிதாக வீடு கட்டி வந்தார். சண்முகசுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சண்முக சுந்தரம் புதுச்சேரியில் இருந்து தனியார் பேருந்தில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் பேருந்தில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சண்முக சுந்தரத்தை பேருந்தில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர். இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.
பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.