விழுப்புரம் : திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து,காராமனி மூட்டைகளை சாக்கு மூட்டைக்கு மாற்றவும் எடைபோடவும் ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் லஞ்சம் பெறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலையில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டிவனத்தை சுற்றியுள்ள சாரம், ஒலக்கூர்,மரக்காணம், சிறுவாடி,நெய்குப்பி, விளங்கம்பாடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்து,நெல், மணிலா, எள்ளு, காராமணி போன்ற தானிய வகைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொடுக்கின்றனர்.


அப்படி கொண்டு வரும் விவசாயிகளிடம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாயிகள் மூட்டையிலிருந்து ஒழுங்கு முறை விற்பனை கூட மூட்டைக்கு மாற்ற ஒரு மூட்டைக்கு 10 ரூபாயும், எடை போடுவதற்கு மூட்டைக்கு 20 ரூபாய் என 30 ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். விவசாயிகளிடம் உள்ள தானிய மூட்டைகளை எடை போட மூட்டை ஒன்றுக்கு 30 ரூபாய் லஞ்சம் வாங்குவதை விவசாயிகள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். விவசாயிகளிடம் மூட்டை எடுபோடுவதற்கு லஞ்சம் பெற கூடாது எனவும் அப்படி லஞ்சம் பெற்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தி இருந்த நிலையிலும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர