கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது மாண்டியா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பாண்டவபுர தாலுகாவில் அமைந்துள்ள மாணிக்யாகாளியில் வசித்து வந்தவர் தீபிகா. அவருக்கு வயது 28. இவர் அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தீபிகாவிற்கு வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.


மாயமான ஆசிரியை:


இந்த நிலையில், கடந்த 20ம் தேதி தீபிகா வழக்கம்போல பள்ளிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற தீபிகா அன்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு அழைத்துபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தீபிகா குடும்பத்தினர் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.


இதையடுத்து, காவல்துறையினர் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய இடம் ஆகிய தடயங்களை வைத்து விசாரணை நடத்தினர். அவரை கடைசியாக அங்கிருந்த கோயில் அருகே சிலர் பார்த்துள்ளனர். அதன்பின்பு, அவரை யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு கடைசியாக தீபிகா வசிக்கும் கிராமத்தில் வசிக்கும் நிதின் கவுடா என்ற இளைஞர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.


சடலமாக மீட்பு:


இந்த நிலையில், தீபிகாவின் ஸ்கூட்டர் மேலுகோட்டேவில் உள்ள பூட்ஹில்ஸ்  மலைப்பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது, அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த சடலம் மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.


தீபிகாவை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் உடலை எரித்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவுடன் கடைசியாக செல்போனில் பேசிய நிதின் கவுடா தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீபிகாவை நிதின் கவுடாதான் கொலை செய்தாரா? தீபிகாவின் மரணத்திற்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆசிரியை தீபிகாவை பாலியல் வன்கொடுமை செய்தே கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெரும் அதிர்ச்சி:


மேலும், கொலை செய்யப்பட்ட தீபிகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்குச் சென்ற ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


 மேலும் படிக்க: Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம்; ரூ.1 கோடியே 26 லட்சத்தை இழந்த நபர்


மேலும் படிக்க: Crime: உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்! ஆசையில் ஓடிய வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பணமும் அபேஸ்!