போலீசை போட்டு தள்ள பிளான்
சென்னை அடுத்த தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருகே சாலையில் இன்று இரவு அதிகாலை 3:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்ட பொழுது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்றபோது அதில் இருந்த நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் , காரை போலீசாரை தாக்க முற்பட்டனர்.
கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட போலீசார்
அதில் ஒருவர் அருவாள் மூலம் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முற்பட்டபோது உதவியாளர் கீழே குனிந்ததால், அவரது தொப்பியில் வெட்டு பட்டுள்ளது. இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டுள்ளனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடி உள்ளனர். மேற்படி துப்பாக்கியால் சுட்டதில் காயம்பட்ட இருவரை பற்றி காவல்துறையினர் விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் என்கிற சோட்டா வினோத் என்பதும் வினோத் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவு குற்றவாளி என்பதும், அவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதில் 10 கொலை 15 கொலை முயற்சி மற்றும் 10 கூட்டுக் கொள்ளை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
என்கவுண்டர் செய்த போலீஸ்
மற்றொரு நபரான ரமேஷ் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் மற்றும் 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரமேஷ் மற்றும் சோட்டா வினோத் ஆகிய இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்ற பொழுது வரும் வழியிலே, அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளனர். தப்பித்து ஓடிய மற்ற இரண்டு ரவுடிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுவாஞ்சேரி பகுதியில் காவலரை தாக்கிய இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் அதிக அளவு ரவுடிகள் மற்றும் குட்டி ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.