தமிழில் ஷ்யாம், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான  ‘லேசா லேசா’ படத்தில் நடித்தவரும் மலையாள இயக்குநருமான ஸ்ரீனிவாசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 



அதனைத்தொடர்ந்து, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  



தற்போதைய நிலவரம் என்ன? 


இந்த விஷயம் குறித்து, நியூ இந்தியன் எக்ஸ்ஃப்ரஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, “நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி நடிகர் ஸ்ரீநிவாசன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆஞ்சியோ கிராம் எடுத்து பார்த்ததில் அவருக்கு, (triple vessel disease) நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் வெண்டிடேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


தலையணை மந்திரம், சந்தேசம், மிதுனம், உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய ஸ்ரீனிவாசன் வடக்குநோக்கியந்திரம், சிந்தாவிஷ்டயாய ஷியாமலா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதி இயக்கி உள்ளார். இதில் வடக்குநோக்கியந்திரம் படத்திற்கு கேரள அரசின் சிறந்த படத்திற்கான விருதும், சிந்தாவிஷ்டயாய ஷியாமலா படத்திற்கு தேசிய விருதோடு, கேரள அரசின் விருதும் வழங்கப்பட்டது. இவரது மூத்த மகன் வினித் ஸ்ரீநிவாசன் மலையாள உலகில் படங்களை இயக்கியுள்ளார். கமல், இயக்குநர் ப்ரியதர்ஷன் உள்ளிட்டோருடன் இவர் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகனான வினித் ஸ்ரீனிவாசன்  மலையாளத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.