தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் நடப்பதை கண்டறிவது சற்று கடினமான ஒன்று. அந்தவகையில் தற்போது ஒருவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணை படம் எடுத்து மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் சைபர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன்னை ஒருவர் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரில், “முதலில் எனக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து ஆபாச வீடியோ ஒன்று வந்தது. அதை முதலில் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதன்பின்னர் அவர் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் நான் வீட்டில் இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்த ஃபேஸ்புக் பக்கம் பயன்படுத்திய இணையதள முகவரியை வைத்து தேடியுள்ளனர். அப்போது மைசூரு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(30) என்ற நபர் குறித்து காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று அவரை பிடித்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க:பாலியல் தொல்லை....தீ வைத்து கொல்ல முயன்ற சிறுவன்... சிகிச்சையில் இருந்த சிறுமி பலி
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மைசூருவிலிருந்து மகேஷ் பெங்களூருவிற்கு ஒரு பணிக்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர் அந்த இளம் பெண் வீட்டில் தங்கியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவர் மொபைல் சார்ஜர் ஒன்றுடன் வேவு பார்க்கும் கேமராவை அவர் வாங்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் அந்த கேமராவை அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் வைத்துள்ளார். அங்கு இருந்த அவர் உடை மாற்றுவது ஆகியவற்றை வீடியோ எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதை வைத்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதாக கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அவர் வேறு பெண்கள் யாராவது ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 செயலிகள்....நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டிய கும்பல்:
உடனடி கடனாக கொடுத்து விட்டு 500 கோடி ரூபாய் பணத்தை மிரட்டி பறித்தது தொடர்பாக நாடு முழுவதும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செயலி மூலம் கடனை கொடுக்கும் அக்கும்பல், 100 பேரிடம் விண்ணப்பம் பெற்று அவர்களின் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றி இருப்பதாக மூத்த காவல்துறை அலுவலர் பகீர் தகவலை பகிர்ந்து உள்ளார்.
இந்த கும்பல் குறித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரகசிய விசாரணை நடத்தப்பட்ட பிறகு, டெல்லி காவல்துறையால் கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலும் இந்த நெட்வொர்க் பரவி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:நைட் க்ளப் ஃப்ரன்ஷிப்! தொழிலதிபரை கடத்த ஸ்கெட்ச் போட்ட பெண் டாக்டர்! சிக்கிய ஒப்பந்தக்காரர்!