Ponniyin Selvan : வந்தியத்தேவனுக்கு இன்னிக்கு தான் நேரம் கிடைச்சுது போல...விக்ரமை பாராட்டி ட்வீட் செய்த கார்த்தி...கிண்டல் செய்த நெட்டிசன்கள்
செப்டம்பர் 30ம் தேதி தமிழ் சீனிமாவின் வரலாற்றில் இடம் பெற போகும் ஒரு பொன்னான நாள். ஆம் ஒட்டுமொத்த திரையுலமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான "பொன்னியின் செல்வன்" காவிய படம் வெளியாகும் நாள்.
திறமையான நடிகர் பட்டாளம் :
இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் மற்றும் "பொன்னி நதி பாக்கணுமே..." என்ற முதல் பாடலும் வெளியானது. இந்த பாடல் வந்திய தேவன் பற்றிய பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். டீசர் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தெடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான "சோழா சோழா..." என்ற பாடல் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. இப்பாடல் VM மஹாலிங்கம் மற்றும் நகுல் அய்யங்கார் பாடியுள்ள இப்படலுக்கு வரிகளை எழுதியுள்ளார் இளங்கோ கிருஷ்ணன். இந்த பாடல் ஆதித்ய கரிகாலனை போற்றும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.
நெட்டிசன்கள் கலாய்:
"சோழா சோழா..." பாடல் வெளியான நாள் முதல் நடிகர் விக்ரமிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். "சீயான் சார் நீங்கள் என்றைக்குமே ராக் ஸ்டார்" என்று இன்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆதித்ய கரிகாலனை இரண்டு நாட்களுக்கு பிறகு பாராட்டிய வந்தியத் தேவன் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.