சென்னை  பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாயிக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த  விமானத்தில் பெரும் அளவில் வைரம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் இணைந்து கண்காணித்தனர்.அப்போது துபாய் செல்ல வந்த  சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை. ஆனால் சூட்கேசில் கைப்பிடி போல் டெலஸ்கோப் வித்தியாசமாக இருந்தது.  அவற்றை பிரித்து பார்த்த போது வைரக்கற்கள் அதிகமாக இருந்தன.






இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் ரூ. 5 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள 1052.72 கேரட் வைரக்கற்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை வாலிபரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இந்த வைரக்கற்கள் எங்கிருந்து கடத்தப்பட்டு வந்தது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் யார் என  விசாரித்து வருகின்றனர்.



முன்னதாக ஆப்பிரிக்க காங்கோ நாட்டில் இருந்து ரூ.10 லட்சத்தி 89 ஆயிரம் மதிப்புள்ள 717.95 கேரட் தீட்டப்படாத வைரக்கற்களை துபாய் வழியாக கடத்தி வந்த மும்பை வாலிபரை கைது செய்த போது சுங்க இலாகா அதிகாரிகளிடம் தந்த தகவலின் பேரில் இந்த வைரக்கற்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | Today Headlines: பிரதமருக்கு முதல்வர் கடிதம்... மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்... ஜார்க்கண்ட் பெட்ரோல்... இன்னும் பல!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண