காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). இவர் கடந்த 6-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு அவர் பணம் எடுக்க சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கிருந்த ஒரு வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி, ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார். அந்த நபர், ஏ.டி.எம்.,யில் பணம் எடுக்க கார்டை செலுத்திவிட்டு, பின்னர் இதில் பணம் இல்லை என்று கூறி, தனலட்சுமியிடம் அந்த கார்டை கொடுத்தார். சிறிது நேரத்துக்கு பின்னர், தனலட்சுமியின் செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
அதன் பின்னர் தான் வைத்திருந்த கார்டை பார்த்த போது, அது வேறு ஒருவருடையது என்பது தெரியவந்தது. மேலும், ஏ.டி.எம். மையத்தில் அந்த வாலிபர் தனலட்சுமியின் கார்டை வைத்துக்கொண்டு வேறு ஒரு கார்டை கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும், தனலட்சுமியின் கார்டை பயன்படுத்தி ரூ. 51 ஆயிரத்தை எடுத்து இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி, தனலட்சுமி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து, துணை காவல் கண்காணிப்பாளர் இங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
மேலும் படிக்க :
காருக்குள் இருந்து கூச்சலிட்ட யாஷிகா..! போலீசில் அளித்த வாக்குமூலம் என்ன?
அதில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர், இந்த நிலையில் செஞ்சி அருகே உள்ள ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த சோலை என்பவரின் மகன் அன்பு என்பதும் இவர் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அன்பு வை தொடர் விசாரணை மேற்கொண்டனர் இருப்பினும் அன்பு தான் எடுக்கவில்லை எனக் கூறி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். போலீசார் அவர்களின் தீவிர விசாரணையை தொடர ஆரம்பித்தனர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அன்பு நான்தான் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு பணம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் காவல் துறை சார்பில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிர்றது. செஞ்சி அருகே, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.51 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மோசடி குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையிலும் விழிப்புணர்வு இல்லாமல் தொடர்ந்து பலரும் ஏமாறி வருவது வேதனைக்குரியது.
‛அம்மா பெயர் தான் பிரச்னை என்றால் அகற்றிவிடுங்கள்...’ ஜெ., பல்கலை குறித்து சி.வி.சண்முகம் பேச்சு!