மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகம் சிவனாரகரம் கிராமம் மேல தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் 50 வயதான மகன் செந்தில்குமார்.  விவசாயியான இவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக அப்பகுதியில் நாட்டாமை பதவியில் இருந்து வருகிறார்.




IND vs PAK: இந்திய சுழலில் சிக்கி தவித்த பாகிஸ்தான்: வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரை துவக்கிய மகளிர் அணி !


இந்நிலையில் இவருக்கும், அதே கிராமத்தல் நடுத்தெருவில் வசிக்கும் இவரது உடன் பிறந்த அண்ணன் 55 வயதான பாண்டியன் என்பவருக்கும் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டாமை பதவியில் நீடிப்பது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது.




IND W vs PAK W: மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை பதம் பார்த்த ரானா - பூஜா ஜோடி.. 244 ரன்கள் இலக்கு வைத்த இந்தியா


மேலும்  வடக்குமலையான் கோயில் கட்டும் இடம் பாண்டியனின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதனால்  அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கு தொடர்ந்து பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனியாக நடுத்தெரு சென்று கொண்டிருந்த செந்தில்குமாரை பாண்டியன் மற்றும் அவரது மகனான 26 வயதான சந்தோஷ்குமார் ஆகியோர் வழிமறித்து பிரச்சினை செய்து செந்தில்குமாரை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, இடது விலா மற்றும் வலது கையில் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 




IND vs SL: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்: பட்டியலில் முன்னேற்றம் - கபில்தேவின் சாதனையை சமன் செய்த அஷ்வின்... !


இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாலையூர் காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நாட்டாண்மை பிரச்சனை மற்றும் இடப் பிரச்னை தொடர்பாக உடன் பிறந்த தம்பியையே அண்ணன் மற்றும் அண்ணன் மகன் இருவரும் சேர்ந்து கூட்டாக கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


IND vs SL 1st Test: ஒரே போட்டியில் 175 ரன்கள்..5 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா - 174 க்கு சுருண்ட இலங்கை