Today Rasipalan : மேஷத்துக்கு வெற்றி...! ரிஷபத்துக்கு கோபம்...! இந்த நாள் உங்களுக்கு எப்படி...?

Today Rasipalan : வாரத்தின் முதல் வேலைநாளான இன்று எந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

நல்ல நேரம் :

Continues below advertisement

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

சூலம் – கிழக்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு கோபம் உண்டாகும். அதனால் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. சொத்து வழி பிரச்சினையில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. துர்க்கை அம்மனுக்கு விளக்கிட்டு வணங்கவும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்றாக அமையும். பணவரவும், தன வரவும் உண்டாகும். எடுத்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். வெளியில் வசூலாகாத கடன் வசூலாகும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தனலட்சுமியின் யோகம் கிட்டும் நாளாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். கர்ப்பிணிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நலக்குறைவு சீராகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வாழ்க்கையின் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மறதி உண்டாகும். முக்கிய வேலைகளை செய்து முடிக்க வேண்டியதில் தாமதம் ஏற்படலாம். பெரியவர்கள் அறிவுரைப்படி செயல்படுவது நல்லது. சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போட்டிகரமான நாளாக அமையும். தொழிலில் மற்றும் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகலாம். பகைமையுடன் செயல்படுபவர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மேன்மையான நாளாக அமையும். உங்களது குணத்தால் சுற்றத்தாரால் உயர்வாக பார்க்கப்படுவீர்கள். பெற்றோர்கள்-பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். தேக ஆரோக்கிய சிக்கல்கள் சீராகும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன உறுதி உண்டாகும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு காண்பீர்கள். முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுபச்செலவுகள் உண்டாகலாம்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே மனக்கசப்பு நீங்கும். வாகன யோகம் வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வீண் செலவு உண்டாகலாம். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். மனதில் நீடித்து வந்த குழப்பம் தீரும். சிவபெருமானை வணங்கி நிம்மதி அடையலாம். தேவையில்லாத விவகாரங்களை மனதில் நினைத்து குழப்பம் அடைய வேண்டாம்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். நீண்ட நாள் மனதில் நினைத்திருந்த ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் புது சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த பிரச்சினை முற்றுப்பெறும்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

 

 

 

 

 

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola