தேசிய பங்குச்சந்தை பரிமாற்றம் எனப்படும் என்.எஸ்.இ.யின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில், இவர் என்.எஸ்.இ.வின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தபோது இணை இருப்பிட மோசடி மற்றும் பங்குச்சந்தைகளை கையாளுதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Continues below advertisement




கடந்த 2018ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வரை தவறாக பயன்படுத்திய தரகர்களுக்கு சந்தைத் தரவின் முன்னுரிடைம அணுகலை வழங்க சேவையகம தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், டெல்லி நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. சித்ரா ராமகிருஷ்ணன் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டதாலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.




முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா ராமகிருஷ்ணனின் ஆலோசகராக செயல்பட்ட ஆனந்த் சுப்ரமணியத்தை போலீசார் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ. இந்த வழக்கில் செயலற்று இருந்ததாகவும் கூறியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண