செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் கௌரி சங்கரா (40) . ப்ராஞ்சைஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.  இவர் வேலை வாங்கித் தருவதாக பல நபர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தல் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இவர் மீது புகார் அளித்துள்ளனர். 




 

அப்புகார் மனுவில் தொழில் துவங்க வாய்ப்பு உருவாக்கி தருவதாகவும், மாத வருமானத்தை ஏற்படுத்தி தருவதாகவும் கூறி புகார்தாரர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பெற்று கொண்டு தொழில்வாய்ப்பை உருவாக்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். தற்போது வந்த புகார்களின் அடிப்படையில் 150 நபர்களிடம் 30 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இவரிடம் பலமுறை பணம் கேட்டு அலைந்து திரிந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என அவர் கூறியதால் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததும் தெரியவந்தது. 



 

இதை தொடர்ந்து அனுமந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்த கௌரிசங்கராவை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த சுரேந்தர் மற்றும் லட்சுமி ஆகியோரையும் கைது செய்தனர்‌. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கௌரி சங்கரா, சுரேந்தரை சைதாப்பேட்டை சிறையிலும், லட்சுமியை புழல் சிறையிலும் அடைத்தனர். இதுமட்டுமின்றி இவர் மீது இன்னும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை வாங்கி தருவதாக ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

 



Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண