கையில் மைக் கிடைத்தால் கண்டதையும் பேசிவிடக்கூடாது என்பதை நிரூபித்திருக்கிறார் உத்தரபிரதேச காவலர் ஒருவர். மாணவர்களுக்கு முன்னால் அந்த போலீஸார் பேசிய பேச்சு இன்று இந்திய முழுவதுமே வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் போலீஸ் ஒருவரை சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது.
காக்கி உடையில் கச்சிதமாக வந்த போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஊக்கம் கொடுக்கும் விதமாகவும் பேசாமல் தேவையில்லாததை பேசி சிக்கலில் சிக்கியுள்ளார். மாணவர்கள் முன்னிலையில் பேசிய அந்த காவலர், '' காவல்துறையை விட சிறந்த துறை எதுவும் இல்லை என்றார். இதனைக் கேட்ட அனைவரும் ஆமாம் உண்மைதானே என்று கைதட்டினர். அதற்கு போலீசார் கொடுத்த விளக்கம் தான் அனைவரையும் அதிர வைத்தது.
மற்ற துறையில் பணம் கொடுத்தாலும் வேலை நடக்காது. ஆனால் காவலர்களிடம் பணம் கொடுத்தால் அந்த வேலையை கச்சிதமாக முடித்துவிடுவார்கள் என்றார். இதனைக் கேட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் என அங்கிருந்தவர்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் சிரித்தனர். லஞ்சம் வாங்குவதை இவ்வளவு பெருமையாக கூறுகிறார் என்பதே பலருக்கும் ஷாக். திடீரென ஆசிரியர்களை பார்த்து பேசிய போலீசார் ‘ஆசிரியர்களை பாருங்கள்.அவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறார்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். இந்த கொரொனா காலத்திலும் வழக்காமனதை விட அதிக வேலை பார்க்க வேண்டி இருக்கிறது என்றார்.
போலீசாரின் லஞ்சம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் போலீஸாருக்கு கண்டனத்தை பதவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் மாவட்ட காவல்துறை கவனத்துக்கு செல்லவே., '' இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்