கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள அங்கனாவாடி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுவைத்து எரித்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஷ்மி எனும் இந்த அங்கன்வாடி ஆசிரியை பணியாற்றும் மையத்தில் பயிலும் இந்தக் குழந்தை, தெரியாமல் தன் உள்ளாடையில் சிறுநீர் கழித்துவந்த நிலையில், ஆத்திரமடைந்த ராஷ்மி தன் உதவியாளருடன் இணைந்து தீக்குச்சியால் குழந்தையின் பிறப்புறுப்பிலேயே சூடு வைத்துள்ளார்.


கடந்த திங்கள்கிழமை இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், நேற்று ( செப். 02) இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் பிரிவு 285இன் கீழ் ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) ராகுல்குமார் ஷஹாபுர்வாட் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: “ரூ. 5 ஆயிரம் கொடுங்க; மனைவியை சேர்த்து வைக்குறேன்!” மந்திரவாதியை போட்டுத்தள்ளிய கணவர்! காரணம் இதுதான்!


”குழந்தை அடிக்கடி தன் ஆடைகளிலேயே சிறுநீர் கழித்து வந்த நிலையில், அதனைத்தடுக்க ஆசிரியை குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு வைத்ததாகத் தெரிவித்துள்ளார்” என இச்சம்பவம் குறித்து காவலர்கள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக ஆசிரியை ராஷ்மி குழந்தையின் பெற்றோரிடம் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க மன்னிப்பு கோரியதாகத் தகவல் வந்தது. எனினும் பாதிக்கப்பட்ட 3 வயது குழ்ந்தையின் பெற்றோர் கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தியதன் பேரில், ஆசிரியை மீது காவல் துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ராஷ்மிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 






குழந்தையின் உடல் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், குழந்தையின் அந்தரங்க பாகங்கள் மற்றும் தொடைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!