ஒரே ஒரு முட்டை பப்ஸ் தான்; மொத்த இந்திய பொருளாதாரமும் காலி - சு.வெங்கடேசன் கேள்வி!

MP Su.Venkatesan: கல்லூரி மாணவி ஒருவர் முட்டை பப்ஸின் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது குறித்து ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரமும் காலி என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

MP Su.Venkatesan: கல்லூரி மாணவி ஒருவர் முட்டை பப்ஸின் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது குறித்து ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரமும் காலி என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மதுரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தான் கலந்து கொண்ட ஒரு கல்லூரி நிகழ்வில் மாணவி ஒருவர் கேட்ட கேள்வியையும், அதற்கு அவர் அளித்த பதிலையும் வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அந்த வீடியோவினை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " அதே பப்ஸ் தான் , அதே அளவு தான் , ஆனா GST வந்து விலை மட்டும் கூடிருச்சு " என்ற மாணவியின் குரலை ஆயிரக்கணக்கான மாணவிகளும் ஆரவாரம் செய்து ஆதரித்தனர். மாணவியின் கேள்வியும் - எனது பதிலும் .... ”முடிவாகிவிட்டதால் மட்டும் ஒன்று சரியானதாகி விட முடியாது” . #GST என குறிப்பிட்டுள்ளார். 

கல்லூரி நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.பி சு. வெங்கடேசனிடம், மாணவி ஒருவர், அதே பப்ஸ் தான், அளவும் அதே தான், ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு பத்து ரூபாய் பப்ஸ் இப்போது பதினைந்து ரூபாயாக விலை ஏறிவிட்டது. அனைத்து பொருட்களின் விலையும் இப்போது அதிகமாகிவிட்டது. இந்த விலை ஏற்றத்தால் நாங்கள் மட்டும் இல்லை, அனைத்து தர மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள், மேலும், இதில் மாற்றம் கொண்டுவர உங்களால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். 

" அதே பப்ஸ் தான் , அதே அளவு தான் , ஆனா GST வந்து விலை மட்டும் கூடிருச்சு " என்ற மாணவியின் குரலை ஆயிரக்கணக்கான மாணவிகளும் ஆரவாரம் செய்து ஆதரித்தனர். மாணவியின் கேள்வியும் - எனது பதிலும் .... முடிவாகிவிட்டதால் மட்டும் ஒன்று சரியானதாகி விட முடியாது . #GST

இதற்கு பதில் அளித்த எம்.பி சு. வெங்கடேசன், பிராமாதமான கேள்வி இது, இந்திய பொருளாதாரம் சம்பந்தமாக இதைவிட பிராமதமன கேள்வியை கேட்க முடியாது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 400 பக்கங்களைக் கொண்டது. இதனை முழுவதுமாக படித்துவிட்டு, நாம் கடைசியாக வந்து நிற்கும் இடம், எனது பப்ஸின் விலை கூடிவிட்டது, ஏன்? என்பதாகத்தான் இருக்கிறது. நேற்று 40 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 44 ரூபாய் காரணம் ஜிஎஸ்டி என்கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைவரும் சேர்ந்து  முடிவு எடுத்துவிட்டோம் அதனால் இது தான் அமல்படுத்தவிருக்கிறோம் என்பது பதிலாக இருகிறது. மேலும், அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டார்கள் என்பதற்காக ஒரு தவறு, சரி ஆகிவிடாது. எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தாலும் தவறு, தவறு தான் என்று கூறியுள்ளார். 

மேலும், நாடாளுமன்றத்தில், இந்த பபஸ் எனும் வார்த்தையை விட்டுவிட்டு இது குறித்து தமிழகத்தில் இருந்து சென்றுள்ள பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி எதற்கு என கேள்வி எழுப்புகிறோம். இதற்கு தீர்வு பப்ஸ் சாப்பிடுகிற அனைவரும், எனது பப்ஸ் விலை ஏன் அதிகமாகிவிட்டது என கேள்வி கேட்கும்போது மட்டும் தான், இதற்கு தீர்வு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாணவி ஒருவர் தான் சாப்பிடும் பப்ஸின் விலை அதிகரித்து விட்டது, அதுவும் ஜிஎஸ்டி வந்த பிறகுதான் இப்படி விலை ஏற்றம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரத்திலும் இது பெரும் கவனத்தினை பெற்றுள்ளது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola