Cyrus Mistry Death: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழப்பு

மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.

Continues below advertisement

மும்பை அருகே பால்கர் அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.

Continues below advertisement

கார் விபத்து:

அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்த போது, அவரின் காரானது பால்கர் என்ற இடத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரில் 4 பேர் இருந்ததாகவும், சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் காரில் பயணித்த இருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சைரஸ் மிஸ்திரியின் உடலானது மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த சைரஸ் மிஸ்திரி, டாடா முழுமத்திலிருந்து வெளியே சென்றபிறகு  வேறு எந்த நிறுவனத்திலும் பணி புரிய மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சைரஸ் மிஸ்திரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுகு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்

Continues below advertisement
Sponsored Links by Taboola