சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும், சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வேதா என்பவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளார். இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ சுவேதாவிற்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் கிராம நிர்வாக அலுவலராக அரசு பணி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். 



தனது இருவேறு கள்ளக்காதலர்களுடன் ஸ்ரீஸ்வேதா


இதனிடையே வருவாய் துறையில் பணிபுரியும் சில ஆண்களுடன் ஸ்ரீ ஸ்வேதாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரிந்து கொண்ட அவரது கணவர் மணிகண்டன் கண்டித்த போது கோபமடைந்த ஸ்ரீ ஸ்வேதா விவாகரத்து கேட்டு ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீ ஸ்வேதாவின் உறவினர்கள் மணிகண்டனின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களது 8 வயது மகனை அழைத்து சொன்றுள்ளனர். பின்னர் மகனை சந்திக்க முடியாமல் தவித்த மணிகண்டன் கள்ளகாதல் விவகாரத்தில் தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சத்தில் மனைவியிடம் இருந்து மகனை மீட்டுத் தர கோரி பெற்றோருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் தனது மனைவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஒன்றாக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் கூடலூரில் இருந்து பணி மாறுதல் பெற்று தற்போது ஈரோட்டில் ஆர்டிஓ-வாக பணிபுரியும் கள்ளக்காதலனுடன் பேசிய உரையாடல் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டுள்ளார்.



மேலும், இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், என் மனைவி அரசு உயர் அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகி வருவது தொடர்பாக கேட்டவுடன் கோபமடைந்தார் என் மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே பலமுறை இது குறித்து தெரிந்து எச்சரித்துள்ளது. ஆனால் ஸ்ரீ ஸ்வேதா அரசு அதிகாரிகள் பலருடன் நெருங்கிப் பழகுவதை மாற்றிக் கொள்ளவில்லை. எனது மகன் தாயுடன் இருந்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதால் அவரை கொலை செய்வதற்கும் துணிந்து விடுவார்கள். எனவே தனது 8 வயது மகனை உடனடியாக மீட்டு தரவேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததாக கூறினார்.  கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவியில் உள்ள பெண் மற்ற அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள புகைப்படம் மற்றும் ஆடியோ பதிவால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.