தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல  சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலும், அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


1.66 லட்சம் பேர் பயணம் :


இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் இருந்து அரசு தரப்பில் சாதாரணமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்து மற்றும் சிறப்பு பேருந்துகள் 1,200 என  ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகளின் மூலம் (21.10.22)நள்ளிரவு 12 மணி வரை 165000 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை சார்பில்  தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 659 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து 21ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே. நகர், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் சானிடோரியம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து பேருந்துகள்  புறப்படுகின்றன.


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 21-ந் தேதி (நேற்று) முதல் 23-ந் தேதி (நாளை) வரையில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10 ஆயிரத்து 518 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6 ஆயிரத்றது 370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர  24/10/2022 முதல் 26/10/2022 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,062 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


வழித்தட மாற்றம்:


அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தமல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Diwali Special Bus : தென் மாவட்டத்திற்கு போகிறீர்களா? கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்..!Diwali : சென்னை விமான நிலையத்தில் குவியும் பயணிகள்...! பன்மடங்கு உயர்ந்த டிக்கெட் விலை...