Crime : பெங்களூருவில் விமான பணிப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது காதலனே நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது விசாரணையில் தெரியவந்தது.


வேறொரு பெண்ணுடன் தொடர்பு


பெங்களூருவில் விமான பணிப்பெண் மரண வழக்கில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், ”உயிரிழந்த விமான பணிப்பெண் அர்ச்சனாவின் தங்கை அஞ்சனா திமான். இவரிடம் விசாரணை நடத்தியதில் சில உண்மைகள் அம்பலமானது.


அதில், ஆதேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், இது குறித்து அர்ச்சனா பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.  பலமுறை கூறியும் ஆதேஷ் கேட்காமல் இருந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்த முயன்றுள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அர்ச்சனா பெங்களூரு சென்றது எங்களுக்கு தெரியாது.


காதலனே கொன்றது அம்பலம்


நான் பலமுறை அவரை ஃபோனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அர்ச்சனா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து ஆதேஷ் எனக்கு தொடர்புகொண்டு அவர் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததாக கூறினார். நாங்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் அர்ச்சனாவுக்கு உடன்பிறந்தவர்கள் 4 தங்கைகள் இருந்த நிலையில், அவர்தான் குடும்பத்தை கவனித்து வந்தார். அவர் இதுபோன்று முடிவு எடுத்ததை நம்பவில்லை” என்றார்.


இதனை அடுத்து உயிரிழந்த அர்ச்சனாவின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து உண்மைகள் வெளிசத்துக்கு வந்தது. மேலும், சம்பவத்தன்று ஆதேஷுடன் இதுபற்றி கேட்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி புகார் அளிப்பதாகவும் கூறியதால், அர்ச்சனாவை நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு ஆதேஷ் கொலை செய்ததது விசாரணை தெரியவந்தது. 


பின்னணி


ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 28 வயதான அர்ச்சனா. இவர் பிரபல விமான நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி வந்துள்ளார்.  இவர் டேட்டிங் ஆப் மூலம் ஆதேஷ் என்ற நபரிடம் பேசி வந்துள்ளார். இவர் ஆதேஷை காண்பதற்காக கடந்த வாரம் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார்.  அர்ச்சனா, ஆதேஷ் என்பவரிடம் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர்.  நண்பராக இருந்த இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  


இந்நிலையில் தனது காதலனை பார்ப்பதற்காக கடந்த வாரம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்த நிலையில், சண்டை ஏற்பட்டது.  இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆதேஷ் அர்ச்சனாவை கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Crime: தலைக்கேறிய மதுபோதை: தாயை கொலை செய்த முன்னாள் காவலர்!