மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் எறிந்த பந்து ஒன்று ஸ்டெம்பை தகர்த்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீக்டிங்கிலும் கலக்கி வருகிறார். நேற்று முன் தினம் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்லீக் தியோல் செய்த பீல்டிங்தான் இன்றைய டாப் டாப்பிக். போட்டியின் 12வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஹர்லீன் தியோல் ஒரு அற்புதமான த்ரோவை எல்லை கோட்டில் இருந்து எறிந்தார். அந்த பந்து நேராக ஸ்டெம்பை பதம் பார்த்து பேட்ஸ்மேன் விக்கெட்டை வீழ்த்தியது.
வைரலாகும் வீடியோ:
ஹர்லீனின் இந்த வீடியோவை மகளிர் பிரிமீயர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மும்பை கேப்டன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அனாபெல் சதர்லேண்டின் லெக் சைடில் ஷாட் அடித்து ஒரு ரன் முடித்ததையும், இரண்டாவது ரன்னுக்காக ஓடுவதையும், அங்கு பீல்டிங்கில் இருந்த ஹர்லீன் தியோல் பவுண்டரி கோட்டில் அந்த பந்தை தடுத்து த்ரோ செய்கிறார்.
அப்போது 2 ரன்கள் எடுத்திருந்த ஹூமைரா ஓடிவரும்போது எறியப்பட்ட அந்த பந்தானது ஸ்டெம்பில்பட்டு தெறித்தது. 2 ரன்கள் எடுத்திருந்த ஹூமைரா ரன் அவுட்டாகி வெளியேறினார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பில், “ஹர்லீன் தியோலின் நேரடி வெற்றி இது” என பதிவிட்டப்பட்டு இருந்தது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அன்றைய போட்டியில் ஹர்லீன் தியோல் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் தோல்வியை சந்தித்தது.
அதேபோல், ஹர்மன்ப்ரீத் கவுர் தூக்கி அடித்த கேட்சை ஹர்லீன் தியோ டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் தற்போது மிகப்பெரிய வைரல்
ஹர்லீன் தியோல்:
ஹர்லீன் தியோல் இதுவரை மகளிர் பிரீமியர் தொடரில் சிறந்த பார்மில் இருக்கிறார். 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அவர், 31 சராசரி மற்றும் 133.62 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டிலும் 155 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம், அவரது அணியான குஜராத் ஜெயண்ட்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நான்கு தோல்விகளுடன் குஜராத் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.