Crime: தலைக்கேறிய மதுபோதை: தாயை கொலை செய்த முன்னாள் காவலர்!

ஆற்காடு அருகே குடிபோதையில் பெற்ற தாயை கொலை செய்த கொடூர மகனை கைது செய்த காவல்துறையினர்.

Continues below advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பகுதியை சேர்ந்தவர் வாணிஸ்வரி இவருடைய கணவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துவிட்டார். இவருக்கு  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிய  நிலையில் மூத்த மகனான ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தினேஷ் காவல்துறையில் பணியில் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லாத காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார். தினேஷுக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தினேஷ் மது போதையில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் தப்பித்த தினேஷின் மனைவி தினேஷை பிரிந்து ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். 

Continues below advertisement

 


தற்போது வாணிஸ்வரி தன் இரண்டாவது மகனான தினேஷுடன் வசித்து வந்தார். நேற்று தினேஷ் அதிக அளவில் மதுகுடித்துவிட்டு தன் தாய் வானீஷ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். குடிபோதையில் உள்ள தன் மகனுக்கு அறிவுரை கூறிய வாணிஸ்வரியை கண்டு ஆத்திரமடைந்த தினேஷ் தன் தாயை இரவு முழுவதும்  கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தன் தாய் இறந்து விட்டார் என்று அறிந்ததும் கதவை பூட்டிவிட்டு காலையிலையே தினேஷ் வீட்டின் அருகாமையில் அமர்ந்து குடித்துவிட்டு வந்துள்ளார். வாணிஸ்ரியும் அவரது மகளான பிரியாவும் நாள்தோறும் இரவு நேரத்தில் செல்போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று முதல் ப்ரியா தன் தாய்க்கு வழக்கம் போல் செல் போன் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது தாய் செல்போன் எடுக்காததால்  சந்தேகம் அடைந்த அவர் தன் தாயை காண  மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டினுள் விடாமல் தினேஷ் பிரியாவை தடுத்துள்ளார். தினேஷை மீறி வீட்டினுள் சென்ற பிரியா அங்கு அவரது தாய் வாணிஸ்வரி சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 


அதன் பிறகு பிரியா கூச்சலிட்டு கதறி அழுத்துள்ளார். அப்போது வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  பிரியாவிடம் விசாரிக்க சென்றதைக் கண்ட தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். பிரியாவிடம் விசாரித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தினேஷை விரட்டி சென்று கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுக்கு அடிமையாகி வேலை இழந்து பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola