ஸ்மார்ட்போன் பிராண்டான போகோ, 'Poco X5 5G' என்ற புதிய மொபைல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயங்கும் புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.


போகோ X5 5G


Poco X5 5G இன் இந்த புதிய வெளியீட்டில், இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் ஒரு வேரியன்ட், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை ₹18,999. மற்றொரு மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை ₹20,999. இந்த இரு மாடல்களுமே 120Hz AMOLED திரை மற்றும் 5G ஆதரவுடன் வருகிறது. Poco X5 5G ஃபோன் Supernova Green, Wildcat Blue மற்றும் Jaguar Black ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது.



எங்கு, எப்போது வாங்கலாம்?


இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 21 அன்று நிறுவனத்தின் இணையதளம் மற்றும் Flipkart.com வழியாக நாட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. Poco X5 5G வாங்குவதற்கு நிறுவனம் அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு ₹2,000 தள்ளுபடியும் அடங்கும். எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ₹2,000 வரை கூடுதலாக கிடைக்கும்.


தொடர்புடைய செய்திகள்: Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..?


ஸ்பெசிஃபிகேஷன்ஸ்


Poco X5 5G ஆனது Qualcomm Snapdragon 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அடுக்குடன் வருகிறது. திரையில் 120Hz ரிஃப்ரஷ் ரேட் உள்ளது மற்றும் 240Hz வரையிலான டச் சாம்பிலிங் ரேட் வழங்குகிறது. மேலும் இந்த  ஸ்மார்ட்போன் சூரிய ஒளி பயன்முறையுடன் வருகிறது மற்றும் 1200nits உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது.



கேமரா மற்றும் சார்ஜிங்


கைபேசியில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பு திறன் உள்ளது. இது பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் இணைக்கப்பட்ட 48MP பிரதான கேமரா உள்ளது. எச்டிஆர், நைட் மோட் மற்றும் ஏஐ காட்சி கண்டறிதல் ஆகியவை போனில் கிடைக்கும் சில அம்சங்கள். செல்ஃபிக்களுக்கு, Poco X5 5G முன்பக்கத்தில் 13MP கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் IP53 மதிப்பீட்டில் வருகிறது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் வெறும் 22 நிமிடங்களில் 0 முதல் 100% வரை சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது.