மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கேன் சென்டர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நாள் தோறும் ஏராளமானோர் பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக ஸ்கேன் செய்து வருகின்றனர்.


கர்ப்பிணி பெண் வயிற்றில் உதைத்த இளைஞர்


இந்நிலையில் நேற்று அந்த ஸ்கேன் சென்டருக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த இளைஞர் ஸ்கேன் சென்ற செல்லும் மாடிப்படியில் ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணிடம் கடுமையாக சண்டை இட்டு அவர் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் வயிற்றில் ஓங்கி மிதித்துள்ளார். 




சமாதானம்:


இதனால் வலி தாங்க முடியாமல் தரையில் விழுந்து அலறி துடித்து கீழே விழுந்து கதறி அழுதார் மயங்கிய நிலைக்குச் சென்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞனிடம் எதிர்த்து கேட்க அங்கிருந்து அவர்  கர்ப்பிணி பெண்னை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓங்கி மிதித்த இளைஞரும் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை சமாதானம் என்ற பெயரில் மருத்துவமனை வளாகத்தில் பொது இடத்தில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொஞ்சி குலாவி சமாதானமாகிக் கொண்டிருந்தனர். 


Pipe Bomb Attack On Japan PM : ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பு சம்பவம்..




கணவன் - மனைவி:


இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு பெண்கள் தட்டி கேட்டனர். அப்போது அந்த இளைஞரால் தாக்கப்பட்டு சில மணி நேரங்களுக்கு முன்பு வலியால் துடித்த அந்த பெண்மணி ஆவேசமாக நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள். எங்களுக்கு தெரியும் என்று அந்தர் பல்டி அடித்து, தன்னை தாக்கிய இளைஞருக்கு ஆதரவாக பாதுகாப்பில் இருந்தவர்களிடம் சண்டைக்குச் சென்றார்.  இந்நிலையில் கர்ப்பிணி பெண்னை தாக்கிய இளைஞரின்  பெயர் விஜய் என்பதும், அந்தப் பெண்மணியின் பெயர் சுபா என்பதும் சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்  என்று மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.


CAPF Exam: முதல்முறையாக தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு; முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு இசைந்த மத்திய அரசு




கர்பிணிப்பெண்ணை காலால் எட்டி உதைக்கும் வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் பரவி வைரல் ஆகி  வருகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியவர் இந்த செயலை கண்டு இந்த காலத்தில் நல்லதற்கே காலம் இல்லை என புலம்பி சென்றனர்.


TN Weather Update: 2 நாளைக்கு முடிஞ்சவரை வீட்டுக்குள்ளயே இருங்கப்பா.. கொளுத்தப்போகும் வெயில்.. ரிப்போர்ட் கொடுத்த அலர்ட்


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற